மதிப்பெண் சான்றிதழில் இனி போட்டோ : போலிகளை ஒழிக்க கல்வித்துறை அதிரடி
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. போலிச் சான்றிதழ்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. இத்திட்டம், வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.