முஷாரப் சொத்துகள் பறிமுதல் பாக்., கோர்ட் கடும் உத்தரவு

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை, “தேடப்படும் குற்றவாளி’யாக அறிவிக்கும்படியும், இந்த வழக்கில் அவர் ஒத்துழைக்காவிட்டால், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யும்படியும் போலீசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நெட்வொர்க்’ அமைத்து போலி பாஸ்போர்ட்: கோவையில் 3 பேர் கைது: கும்பலுக்கு வலை

posted in: மற்றவை | 0

“கோவை: தமிழகத்தில், “நெட்வொர்க்’ அமைத்து, போலி ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் மூலம், போலி பாஸ்போர்ட் தயாரித்துள்ள மூவரை, போலீசார் கைது செய்தனர்; இதன் பின்னணியில் செயல்படும் கும்பலை பிடிக்க, நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தியர் விசாக்கள் புதுப்பிப்பு உதவ வயலார் ரவி கோரிக்கை

posted in: அரசியல் | 0

மும்பை: “வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் விசாக்கள் புதுப்பிக்கப்படாத போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்’ என, மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

நாசா’ விஞ்ஞானி கைது

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி துறை ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்க முயன்றதாக நாசா விஞ்ஞானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தங்கத்துக்கு போட்டியாக மஞ்சள் விலை உயர்வு

ஈரோடு: ஐந்து நாட்களில் மஞ்சள் விலை, குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் அதிகரித்து, நேற்று 11 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்று, சாதனை படைத்துள்ளது. ஈரோட்டில், ஈரோடு ஒழுங்குமுறை மார்க்கெட், வெளிமார்க்கெட், ஈரோடு சொசைட்டி மார்க்கெட், கோபி சொசைட்டி மார்க்கெட் ஆகிய நான்கு மஞ்சள் மார்க்கெட் செயல்படுகிறது.

போலீஸ் உயர் அதிகாரிகள் 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை : போலீஸ் – வக்கீல் மோதல் சம்பவத்தில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

posted in: கோர்ட் | 0

சென்னை : “ஐகோர்ட் வளாகத்தில் நடந்த சம்பவத்திற்கு முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முன்னாள் இணை கமிஷனர் ராமசுப்ரமணி, முன்னாள் துணை கமிஷனர் பிரேமானந்த் சின்கா ஆகியோர் காரணம். இவர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜெய்ப்பூர் பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி

posted in: மற்றவை | 0

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூர் அருகே பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஐந்து பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் 150 பேர் காயம் அடைந்தனர். ராஜஸ்தான் ஜெய்ப்பூரில், சீதாப்பூர் அருகே உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் சேமிப்பு கிடங்கு உள்ளது.

தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : ராமநாதபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், நித்யானந்தம், வனிதா, சுமதி, சாந்தி, ஸ்ரீபிரியா, சரளாதேவி, சவுந்திரவள்ளி, விருதுநகரை சேர்ந்த பரமசிவம், சேதுராமன் ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட்:

அதிக முதலீடு: இந்தியாவுக்கு எகிப்து அழைப்பு

கெய்ரோ : தங்கள் நாட்டில் தொழில்துறையில் முதலீடு செய்வதை அதிகரிக்கும் படி எகிப்து நாடு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எகிப்துக்கான இந்திய தூதர் ராமசந்திரன் சுவாமிநாதன் தலைமையிலான குழு ஒன்று எகிப்து சென்றுள்ளது.

உருப்படியான யோசனையுடன் வந்தால் பேசத் தயார் : மன்மோகன்

posted in: அரசியல் | 0

ஆனந்த்நாக் (காஷ்மீர்) : “”காஷ்மீரில் அமைதியை உருவாக்க உருப்படியான யோசனைகளுடன் வரும் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,” என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.