இலவச கண் சிகிச்சையில் 11 பேர் கண்பார்வை இழப்பு
சென்னை : இலவச கண்சிகிச்சை செய்து கொண்ட 11பேர் கண்பார்வை இழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் கண்நோய்க்காக 26 பேர் இலவச கண்சிகிச்சை முகாமில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். சிகிச்சை முடிந்த சில நாட்களில் 11 பேருக்கு கண்களில் எரிச்சலும், பார்வைக் குறைபாடும் இருந்துள்ளன. படிப்படியாக பார்வையும் பறிபோய்விட்டது.