விமான பயிற்சி பள்ளிகள் முக்கிய நகரங்களில் துவக்கம்
சேலம் : இந்தியாவில், விமானிகளுக்கான (பைலட்) தேவை அதிகரித்து வருவதால், சேலம், தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில், விமான பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன. வர்த்தக நோக்கில், விமான பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.