சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 2011 முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 2011ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாநில பாடதிட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று அறிவித்தார்.