அடையாள எண் இல்லாத மொபைல் இணைப்புகள் துண்டிப்பு : டிச.1ல் கோடிக்கணக்கில் செயலிழக்கும் அபாயம்

posted in: மற்றவை | 0

ஐ.எம்.இ.ஐ., என்றழைக்கப்படும் அடையாள எண் இல்லாத மொபைல் போன்களுக்கான சேவை, டிசம்பர் 1ம் தேதி நிறுத்தப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவித்து உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கோடிக்கணக்கில் மொபைல் போன்கள் செயலிழக்கும்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் * தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அதிரடி

posted in: மற்றவை | 0

கோவை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி லேசில் தப்பிக்க முடியாது. கடந்த ஆண்டு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் 60 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை விளக்கம் கேட்டு … Continued

ரயில் விபத்து பற்றி முன்னெச்சரிக்கை கொடுப்போருக்கு வேலை: மம்தா

posted in: அரசியல் | 0

புதுடில்லி:ரயில் விபத்து நடக்கும் என்று தெரிந்து அதுபற்றி முன்கூட்டியே ரயில்வே நிர்வாகத்துக்குத் தெரிவிப்பவர்களுக்கு ரயில்வேயில் வேலை தரப்படும்,” என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் தாரகேஸ்வர்-நரிக்குல் இரட்டைவழி ரயில் பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது:

புலிகளின் சர்வதேச வலை : இலங்கை செயலர் கவலை

posted in: உலகம் | 0

இலங்கையில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கருதும் அந்நாட்டு அரசு, அவர்களது சர்வதேசத் தொடர்புகளால் கவலை அடைந்துள்ளது. புலித் தலைவர் பிரபாகரனின் மரணத்துக்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு அரசு கருதுகிறது.

20 வருடங்களுக்குப் பின் அரிசியை இறக்குமதி செய்யும் இந்தியா!

posted in: மற்றவை | 0

டெல்லி: வழக்கமாக அரிசியை ஏற்றுமதி செய்தே பழக்கப்பட்ட இந்தியா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, முதல் முறையாக அரிசியை இறக்குமதி செய்யவுள்ளது.

சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்

posted in: உலகம் | 0

ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது

டாடா சாம்ராஜ்யம்… அடுத்த வாரிசு யார்?

டாடா குழுமம்… பொதுவுடைமைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், இந்தியா வுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனம் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்திய தொழில் துறைக்கு முகவரி தந்த நிறுவனம் டாடா குழுமம் என்றால் மிகையல்ல.

கூலிப்படை அனுப்பி கொள்ளையடித்த பெண் ‘தாதா’

posted in: மற்றவை | 0

சென்னை: கூலிப்படையை அனுப்பி ரூ.14.5 லட்சம் கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டார். இந்தப் பெண் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

பாக்டீரியா மூலம் கண்ணிவெடியைக் கண்டுபிடித்து அமெ. விஞ்ஞானிகள் சாதனை

posted in: உலகம் | 0

மண்​ணில் புதைத்​து​வைக்​கப்​பட்​டுள்ள கண்​ணி​வெ​டி​களை பாக்​டீ​ரியா மூலம் கண்​டு​பி​டித்து அமெ​ரிக்க விஞ்​ஞா​னி​கள் சாதனை படைத்​துள்​ள​னர்.

எரிசக்தி துறையில் சீனாவை மிஞ்சியது இந்தியா

மும்பை: ஆசிய நாடுகளில் எரிசக்தி துறையில் முன்னிணியில் இருக்கும் முதல் 15 நிறுவனங்களில் ஐந்து இடங்களை இந்திய பிடித்துள்ளது. இதில் சீனா மூன்று நிறுவனங்களுடன் பின்னுக்கு தள்ளப் பட்டுள்ளது.