மூளைக்கட்டி, மலட்டுத்தன்மை, நரம்புக் கோளாறு… எல்லாம் செல்போன் டவர் செய்யும் வேலை
டெல்லி: நகரெங்கும் சிவப்பு, காவி, வெள்ளை, பச்சை என கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டெல்லி: நகரெங்கும் சிவப்பு, காவி, வெள்ளை, பச்சை என கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. ரவுடிகளைப் பார்த்து போலீஸார் பயப்படும் நிலை ஏற்பட்டு விட்டது, மின் தடை நேரம் அதிகரிப்பு, விலைவாசி அதிகரிப்பு என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கை போர் காரணமாக நிர்மூலமான ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகளை கட்டித்தரக்கூடிய வசதி இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது என்றும், விவசாய அறுவடைகளின் பின்னர் மக்களே அவற்றைக் கட்டிக்கொள்வார்கள் என்றும் இலங்கை அரசாங்கத்தரப்பில் தம்மிடம் கூறப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
நெல்லை: உலக வெப்பமயமாதலால் 2030க்குள் தூத்துக்குடி மற்றும் சென்னையின் ஒரு பகுதி கடலில் முழ்கும் அபாயம் இருப்பதாக நெல்லை பேராசிரியர் தெரிவித்தார்.
சிங்கப்பூர்: இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ க்வான் யூ பரபரப்பாக கூறியுள்ளார்.
மத்திய அமைச்சகத்தின் தொழிலாளர் நலத்துறை சர்வதேசப் பொருளாதார நெருக்கடிக்குப் பின் வேலை வாய்ப்புகள் குறித்து சமீபத்தில் 6வது காலாண்டு ஆய்வை நடத்தியது.
தஞ்சாவூர்:””நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய சட்டசபை வளாகத்தில் கூட்டம் நடத்தப்பட மாட்டாது; பழைய வளாகத்திலேயே கூட்டம் நடத்தப்படும் என்று கூறிய ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்து தான் பேசுகிறார்,” என்று துணை முதல்வர் ஸ்டாலின், தஞ்சை திருமண விழாவில் பேசினார்.
புதுடில்லி : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை இன்று உயரலாம். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 25 முதல் 50 ரூபாய் வரையும் உயரும் என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
கோவை : “கள் இறக்க அனுமதி கேட்டு போராடும் கொங்கு மண்டல பெண்களை தொடர்ந்து இழிவாக பேசும் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படும்; தவிர, செம்மொழி மாநாட்டையும் நடத்த விடமாட்டோம்’ என, கொங்கு முன்னேற்றக் கழக மகளிரணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை : தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறினார்.