ஒட்டுக் கேட்பது காங்., வழக்கம்; சந்திரபாபு நாயுடு கண்டனம்

posted in: அரசியல் | 0

ஐதராபாத்:முக்கிய தலைவர்களின் தொலைபேசி பேச்சை ஒட்டுக் கேட்டது தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார்.

சமச்சீர் கல்வி இதர மொழிகளுக்கு எதிரானதல்ல: தங்கம் தென்னரசு

posted in: கல்வி | 0

சென்னை:”சிறுபான்மை மற்றும் இதர மொழிகளுக்கு சமச்சீர் கல்வி எதிரானது அல்ல. நான்காம் தொகுப் பில் எந்த மொழியையும் படிக்க தடையில்லை,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப் சிலியில்!

posted in: உலகம் | 0

அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய டெலஸ்கோப் அமைக்கப்பட உள்ளது. இது ரூ.5 ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்

posted in: கல்வி | 0

சென்னை : எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., படிப்புகளுக்கான, ‘டான்செட்’ நுழைவுத் தேர்வெழுத, ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஐகோர்ட்டை கலவரபூமி ஆக்கினால் மக்கள்மன்னிக்க மாட்டார்கள்: முதல்வர் பேச்சு

posted in: அரசியல் | 0

சென்னை:’ஐகோர்ட்டை கலவர பூமியாக ஆக்குகின்றவர்கள் யாராக இருந்தாலும், பொதுமக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்’ என, முதல்வர் கருணாநிதி பேசினார்.

புல்லட் புரூப் கார்: இறக்குமதிக்கு அனுமதி

புதுடில்லி: இந்தியாவின் பிரபல தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, புல்லட் புரூப் வசதி கொண்ட பி.எம்.டபிள்யூ., காரை இறக்குமதி செய்து, டில்லி பகுதியில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

திருப்பதி கோவில் உண்டியலில் அம்பானி மனைவி போட்டது என்ன?

posted in: மற்றவை | 0

திருப்பதி : தன் அணியான மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் குழு, இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, திருப்பதியில் தரிசனம் செய்த முகேஷ் அம்பானியின் மனைவி, இரண்டு சூட்கேஸ் பணத்தையும் ஒரு பெரிய பை நிறைய தங்க நகைகளையும் உண்டியலில் போட்டார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை படம் பிடிக்க டிவி நிறுவனங்களிடம் ரூ.3.5 கோடி கேட்ட சோயப்

posted in: உலகம் | 0

லாகூர்: தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய பாகிஸ்தான் டிவி நிறுவனங்களிடம் ரூ. 3.5 கோடி கேட்டுள்ளார் சோயப் மாலிக். ஆனால் எந்த டிவியும் அதை ஏற்கவில்லையாம்.

கொழும்பில் நடைபெறும் திரைப்பட விழாவை தமிழ் நடிகர்கள் புறக்கணிக்க வேண்டும்: சீமான்

posted in: மற்றவை | 0

கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை தமிழ் திரைப்பட நடிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் தனது அறிக்கையில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

அட்சய திருதியை எதிர்பார்த்து தங்கம் இறக்குமதி அதிகரிப்பு

மும்பை: மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 27.8 டன்னாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தங்கத்தின் விலை சற்று குறைந்தது தான்.