திமுக தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன்: அழகிரி
சென்னை, ஏப்ரல் 1: திமுக தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவேன் என்று மு.க.அழகிரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
சென்னை, ஏப்ரல் 1: திமுக தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவேன் என்று மு.க.அழகிரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
புதுடில்லி : மிக விரைவில் ஆப்பிரிக்கா கண்டத்திலும் தனது தொலைத் தொடர்பு சேவையை விரிவுபடுத்த பார்தி ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.
புதுடில்லி: அரியானாவின் மானேசர் பகுதியில் அமைந்துள்ள மாருதி சுசூகி நிறுவன தொழிற்சாலைக்கு, பைப்லைன் மூலம் இயற்கை எரிவாயு வினியோகத்தை, ‘கெய்ல்’ இந்தியா நிறுவனம் துவக்கியது.
ஈரோடு: ”எந்த இயக்கத்திலும் தொண்டர்கள் தங்களை அழித்துக் கொள்ள கூடாது. தோல்வியைத் தாங்கி எதிர்த்து போராடும் தைரியம் இருக்க வேண்டும்,” என, வைகோ பேசினார்.ம.தி.மு.க., சார்பில் மே 28ல் நடக்கும் கேரள எல்லை முற்றுகைப் போராட்டம் குறித்து விளக்குவதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஈரோடு மாவட்டத்தில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
புதுடில்லி : வரலாற்று சிறப்புமிக்க சட்டமான, ஆறிலிருந்து 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு ‘கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாயக் கல்வி’ சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மும்பை, மார்ச் 31: குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்கள் வீசப்படாததால் மும்பை இண்டியன்ஸ் அணித் தலைவர் சச்சின் டெண்டுல்கருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன், மார்ச் 31: நிலநடுக்கம் ஏற்படப்போவதை சுமார் 5 நாட்களுக்கு முன்னதாகவே அறியும் சக்தி தேரைகளுக்கு உண்டு என ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடில்லி: உங்களிடம் பான்கார்டு உள்ளதா? இல்லையென்றால் உடனே பான்கார்டுக்கு அப்ளை செய்யுங்கள்! இல்லையென்றால் உங்கள் வருமான வரி தொகையில் 20 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும்.
சட்டசபையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்ட, தி.மு.க., நான்கு ஆண்டுகளாக முயற்சித்து, தற்போது தான் செஞ்சுரி அடிக்க முடிந்துள்ளது. சபாநாயகரையும் சேர்த்து, தி.மு.க., உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : ”பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பங்கள் மே 3ம் தேதி முதல் வழங்கப்படும். ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும்,” என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.