விலைவாசியை கட்டுப்படுத்த வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

புதுடில்லி: ‘உணவுப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த, வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் முதல் வாரத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவாக, 20 சதவீதத்தை அடைந்தது.

காட்டெருமையிடம் பாசம் காட்டும் விவசாயி

posted in: மற்றவை | 0

கொடைக்கானல் : கொடைக்கானலில் காட்டெருமையை தன் வசப்படுத்தி, விவசாயி ஒருவர் பழகி வருகிறார். கொடைக்கானல் செண்பகனூர் வனப்பகுதி, பேரி தோட்டத் திற்கு வரும் காட்டெருமைகள் விளை நிலங்களை நாசம் செய்கின்றன. உணவு தேடி வந்த 12 வயது ஆண் எருமை காலில் அடிபட்டு, நடக்க முடியாமல் தவித்தது. இதை பார்த்த செண்பனூரை சேர்ந்த ஜான், அதற்கு … Continued

மத்திய அமைச்சரவையில் ராகுல்: பிரதமர் மன்மோகன் விருப்பம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”காங்., தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ராகுல் இடம் பெற வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.உ.பி.,யில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டதற்காக, இந்த ஆண்டின் சிறந்த அரசியல் தலைவருக்கான விருது, தனியார் ஆங்கில “டிவி’ சேனல் சார்பில் காங்., பொதுச் செயலர் ராகுலுக்கு வழங்கப்பட்டது.

கப்பல் உண்மையில் புலிகளுக்குச் சொந்தமானதா அல்லது பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டதா?: உறுதிப்படுத்துமாறு ஐ.தே.க. சவால்

posted in: உலகம் | 0

பின்ஸஸ் கிரிஸ்டினா கப்பல் உண்மையில் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானதா அல்லது வேறு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலா என்பது தொடர்பில் சாட்சியத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்திற்குச் சவால் விடுக்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என் கூடவே பிறந்த காவிரிப் பிரச்சினை -கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: நான் பிறந்த அதே 1924ம் ஆண்டுதான் காவிரிப் பிரச்சினையும் முதன் முதலாக வெடித்தது. அன்று முதல் இன்று வரை அந்தப் பிரச்சினையுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அடுத்த கல்வி ஆண்டில் 200 பள்ளிகள் தரம் உயர்வு பள்ளி கல்வி இயக்குனர் பேச்சு

posted in: கல்வி | 0

பழநி:அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், அடுத்த கல்வி ஆண்டில்(2010-2011), 200 பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், என பள்ளிக்கல்வி இயக்குனர் பி.பெருமாள்சாமி தெரிவித்தார்.

அனைவரையும் ஈர்க்கும் வகையில் ரூ. 26 கோடியில் மெரீனா நவீனம்:கல்வெட்டை திறந்து முதல்வர் பார்வை

posted in: அரசியல் | 0

சென்னை: மெரீனா கடற்கரை, 26 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. கல்வெட்டு அருகே மரக்கன்றுகளை நட்டு, முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார்.

மாணவர்கள் விசாவில்பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் அதிகரிப்பு

posted in: உலகம் | 0

லண்டன்:படிப்பதற்காக செல்வதாகக் கூறி இந்தியர்கள் பலர், மாணவர்களுக்கான விசாவை பெற்று பிரிட்டனில் குடியேறுவது அதிகரித்துள்ளது.பிரிட்டனில் தங்குவதற்கு பல காரணங்கள் தேவை.

கண்டக்டருக்கே விசுலு!

posted in: மற்றவை | 0

குளிரடிக்கும் காலை; குன்னூர் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து மேட்டுப்பாளையம் கிளம்புகிறது அந்த அரசு பஸ். வேகமாய் ஓடி வந்து நாலு பேர் பஸ் ஏற, “ஏங்க, இவ்வளவு அவசரம், அடுத்த பஸ்ல வரலாமே’ என்றால், “இதுல போனாத்தான் இன்னிக்கு நாளு நல்லாயிருக்கும்,’ என்று புதிர் முடிச்சுப் போட்டார்கள். அவர்கள் முடிப்பதற்குள் ஒரு கணீர்க்குரல்…

ரேசன் கார்டு செல்லுபடியாகுமா ? இணையதளத்தில் வெளியீடு

posted in: மற்றவை | 17

சென்னை : உங்கள் ரேசன் கார்டுகள் செல்லுபடியாகுமா இல்லை ரத்து செய்யப்பட்டு விட்டதா என பார்க்க வேண்டுமா ? இதற்கான தகவல்களை தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கார்டுதாரர்கள் கார்டுக்கான எண்ணை பதிவு செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம். ரேசன் கார்டுகள் வரும் 31 ம் தேதியுடன் காலவதியாகிறது. இந்தகார்டுகள் அடுத்த ஆண்டு வரை … Continued