உரிய நேரத்தில் முடிவு மத்திய அரசுக்கு நன்றி
சென்னை : மீனவர் சட்டத்தை நடப்பு தொடரில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று கூறியதற்காக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவாருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : மீனவர் சட்டத்தை நடப்பு தொடரில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று கூறியதற்காக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவாருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
வாஷிங்டன்: பூமியைப் போலவே நீர் நிறைந்த, அதைவிட 2.7 மடங்கு பெரிய Ôசூப்பர் பூமிÕ கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வேர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பூமிக்கு அருகே அதைவிட 2.7 மடங்கு பெரிதாக மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
உலக வங்கி, இலங்கைக்கு 77 மில்லியன்கள் டொலர்களை உதவியாக வழங்கும் ஒப்புதலை அளித்துள்ளது. இந்த ஒப்புதல் நேற்று வாசிங்டனில் வழங்கப்பட்டது
மும்பை : மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் இன்று வாக்குமூலம் அளித்தான். அதில் எனக்கும் மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளான். மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் இருக்கும் சிறப்பு கோர்ட்டில் அவன் வாக்குமூலம் அளித்தான். கோர்ட் உத்தரவுப்படி இந்த வாக்குமூலம் டேப் செய்யப்பட்டது.
புதுடில்லி : இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்த பெருமைக்கு சொந்தக்காரர். ரத யாத்திரை மூலம் இந்திய மக்களை சந்தித்து தனது இமேஜூம், பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்த காரணமாக இருந்தவருமான அத்வானி, பிரதமர் பதவியில் அமருவார் என்ற எதிர்பார்ப்பு முடியாமல் போனது என்பது பெருவாரியான மக்களின் ஏகோபித்த எண்ணமாக எழுகிறது. லால் … Continued
கோபன்ஹேகன் : டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் புவி வெப்ப தடுப்பு மாநாட்டின் அரங்கினுள் நுழைய முயற்சி கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் மிளகு ஸ்பிரே அடித்து விரட்டினர்.
சென்னை: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளின் அமைவிடங்கள் அடிப்படையில், நான்கு பிரிவுகளாக பிரித்து, கட்டணம் நிர்ணயம் செய்ய, கட்டண சீரமைப்புக் குழு திட்டமிட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கலமசேரியில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து தீவைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி விடுதலையான மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சுபியா மதானி கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு உதவ முக்கிய கட்சிகள் மறுத்து விட்டன.
சான்பிரான்ஸிஸ்கோ: அடிக்கடி எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.