நோபல் பரிசை பெற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா

posted in: உலகம் | 0

ஆஸ்லோ : அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நேற்று வழங்கப்பட்டது. வன்முறை இல்லாத போராட்டத்துக்கு வழிவகுத்த மகாத்மா காந்தி, உலக அமைதிக்கான முயற்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக ஒபாமா தன்னுடைய உரையில் புகழாரம் சூட்டினார்.

93 எம்எல்ஏக்கள் ராஜினாமா

posted in: அரசியல் | 0

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி வேறுபாடு இன்றி, 93 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆந்திராவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை-யுஎஸ் சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுத்தம்!

பெங்களூர்: உலகின் மிகப்பெரிய கண்டெய்னர் ஷிப்பிங் நிறுவனமான மெர்ஸ்க் லைன் தனது அமெரிக்க- சென்னை நேரடி கப்பல் போக்குவரத்தை வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

பள்ளிகளில் நூலக வகுப்பிற்கு நேரம் ஒதுக்கீடு செய்ய உத்தரவு

posted in: மற்றவை | 0

திண்டுக்கல்: பள்ளிகளில் நூலக வகுப்பிற்கு மாணவர்கள் செல்ல நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்த வேண்டும்.

மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு இடைத்தேர்தலில் விலக்கு கூடாது: ஐகோர்ட்டில் மனு தாக்கல்

posted in: கோர்ட் | 0

சென்னை: தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு, தேர்தல் நடத்தை விதிகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கக் கூடாது எனக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

11 நாட்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் சந்திரசேகர ராவ் : தனி தெலுங்கானா உருவாக்க மத்திய அரசு சம்மதம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் தெரிவித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மத்திய அரசு பணிந்தது. இதையடுத்து, சந்திரசேகர ராவ் தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

பின்லேடனை கொல்லாமல் அல்-காய்தாவை தோற்கடிக்க முடியாது: அமெரிக்க இராணுவ தளபதி

posted in: உலகம் | 0

சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லேடனைக் கொல்வது அல்லது உயிருடன் பிடிப்பது ஆகிய ஏதாவது ஒன்றின் மூலமே அல்- காய்தாவை தோற்கடிக்க முடியும் என்று ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளுக்கான இராணுவ தளபதி ஸ்டேன்லி மிக்கிறிஸ்டல் தெரிவித்துள்ளார்.

புலிகள் தன்மீது தாக்குதல் நடத்தும் சாத்தியம் உண்டு என்கிறார் சரத் பொன்சேகா

posted in: உலகம் | 0

விடுதலைப் புலிகள் தம் மீது தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியம் உள்ளது என்று முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனாதிபதி தேர்தல் எதிரணிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா அச்சம் வெளியிட்டுள்ளார்.